கொரோனாவினால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

319 0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் 17 பேர் IDH எனப்படும் கொழும்பு நோய் தொற்றியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் அறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப்பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன், நோய்த் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்பட்ட ஐவர் நேற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இவர்களின் இரத்த மாதிரிகளை சோதனைக்குட்படுத்தியபோது, கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே இவர்கள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.