குப்பை மேட்டுக்கு தீ வைத்ததால் வீடு ஒன்றுக்கு முற்றாக சேதம்

281 0

களனி, பிலப்பிட்டிய குடியிருப்பு பகுதியில் உள்ள குப்பை மேடு ஒன்றுக்கு தீ வைத்த சந்தர்ப்பத்தில் அந்த தீ அருகில் இருக்கும் வீடுகளுக்கும் பரவியுள்ளது.

இந்த தீபரவல் சம்பவம் நேற்று (29) பிற்பகல் 3 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

எனினும் கொழும்பு தீயணைப்பு படையினரும் பொது மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த தீ பரவல் சம்பவத்தால் எந்த வித உயர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் தீயினால் வீடொன்று முற்றாக சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.