தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளனர் – திஸ்ஸ!

308 0

கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கத்தின் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை குறைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், பொதுமக்களின் தேவைகள் குறித்து பேசாமல் முக்கியமற்ற பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் அரசாங்கம் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறினார்.

வாழ்க்கைச் செலவு தொடர்பிலான பிரச்சினை, பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், வேலை வாய்ப்புகள் போன்ற பல விடயங்களில் பொதுமக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருப்பதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டினார்.

எனவே இந்த விடயங்களுக்கான தீர்வு தொடர்பாக அரசாங்கத்தின் தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் இல்லாததால், தற்போது பொதுமக்கள் கடும் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இருப்பினும் அரசாங்கத்தில் மக்கள் அதிருப்தியில் இருக்கும்போது, எதிர்க்கட்சி தனது பொறுப்பையும் நிறைவேற்றத் தவறிவிட்டது என்றும் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டினார்.