இராஜாங்க அமைச்சர்கள் எழுவருக்கான விடயதானங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடபடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சுசந்த புஜ்ஜிநிலமே, பிரியங்கர ஜயரத்ன, விதுர விக்ரமநாயக்க, சேகான் சேமசிங்க, லோஹான் ரத்வத்த, தாரக பாலசூரிய, மற்றும் நிமல் லன்சா ஆகிய இராஜாங்க அமைச்சர்களுக்கான விடயதானங்களே இதுவரை அறிவிக்கப்படாதுள்ளன.
இராஜாங்க அமைச்சர்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புகளை வழங்குமாறு அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.
இராஜாங்க அமைச்சர்கள் கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி பதியேற்றுக்கொண்டமை குறிப்பிடதக்கது.

