பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நியமனம்

245 0

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் நந்த மல்லவ ஆராய்ச்சி பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ´சுபீட்சத்தின் நோக்கு´ கொள்கை பிரகடனத்திற்கு அமைய வறுமையற்ற இலங்கையை ஏற்படுத்தும் நோக்கில் பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.

குறைந்த வருமானத்தை ஈட்டும் குடும்பங்களின் குறைந்த கல்வித் தகுதியை கொண்டுள்ள நபர்களுக்கு உரிய தொழிற்பயிற்சியினை வழங்கி அரசின் நிலையான தொழிலை பெற்றுக் கொடுப்பது இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் நந்த மல்லவஆராய்ச்சி பதில் இராணுவ தளபதியாக கடந்த 2007 ஆண்டு இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.

இந்தோனேஷியாவுக்கான இலங்கை தூதுவராக இவர் 06 வருடங்கள் பணிபுரிந்துள்ளார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் ஸ்தாபக செயலாளராகவும் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளராகவும் நந்த மல்லவஆராய்ச்சி பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.