10,800 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இலங்கை பிரஜை கைது!

283 0

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களை டுபாயில் இருந்து நாட்டுக்கு கொண்டு வந்த இலங்கை பிரஜை ஒருவரை விமான நிலைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரை இன்று (17) அதிகாலை கைது செய்தாக விமான விமான நிலைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி, பரந்தன் பகுதியை சேர்ந்த 26 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று அதிகாலை 3.30 அளவில் டுபாயில் இருந்து வருகை தந்த கல்ப் விமான சேவைக்கு சொந்தமான ஜி 9 – 0507 என்ற இலக்கமுடைய விமானத்தின் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளார்.

அவரின் பயண பையில் 650,000 ரூபா பெறுமதியான 10,800 வெளிநாட்டு சிகரெட்டுகளை மறைத்து வைத்து கொண்டு வந்த போதே அவை கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபரையும், கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.