அநுராதபுரத்தை புனித நகரமாக சகல வசதிகளையும் கொண்டதாக அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான உத்தேச திட்டத்தை தயாரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.
சமீபத்தில் நடைபெற்ற நகர அபிவிருத்தி பணிகளுக்கான திட்ட நிகழ்வுவில் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
போசன் நோன்மதி தினம் மற்றும் ஏனைய மத வைபவங்களின் போது அநுராதபுரம் புனித பூமிக்கு இலட்சக்கணக்கானோர் வருகை தருகின்றனர்.
அத்தோடு நாளாந்த பல்வேறு நடவடிக்கைகளுக்காக பெரும் எண்ணிக்கையிலானோர் புனித நகரத்துக்கு வருகை தருகின்றனர்.
இவர்களுக்கு வசதிகளைச் செய்யும் வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகள் திட்டமிடப்படுகின்றன. பஸ் தரிப்பு நிலையம், வாராந்த சந்தை மற்றும் ரயில் நிலையம் ஆகியவை முறையான வகையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
புதிதாக வாகன தரிப்பு மற்றும் சிறுவர் பூங்கா அமைக்கப்படவுள்ளது.

