தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நிகழ்வு இன்று

346 0

புதிய வருடத்தில் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு இன்று இடம்பெறுகின்றது.

சுமார் 2 இலட்சத்து 35 ஆயிரம் மாணவர்கள் இம்முறை தரம் ஒன்றில் இணைந்து கொள்ளப்படுகின்றனர்.

இதன் பிரதான வைபவம் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தலைமையில் மாத்தளை னுககொல்ல தர்ம பிரதீப ஆரம்ப பாடசாலையில் இன்று காலை இடம்பெறுகின்றது.

கடந்த வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசல் பரீட்சையில் 3 வது இடத்தை மாத்தளை னுககொல்ல தர்ம பிரதீப ஆரம்ப மாணவி பெற்றுக்கொண்டார். அந்த மாணவிக்கு வழங்கும் கௌரவமாக தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பிரதான நிகழ்வை அங்கு நடத்த தீர்மானித்ததாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம். ரத்நாயக்க தெரிவித்தார்.