மூன்று இராஜாங்க அமைச்சர்களின் விடயதானங்கள் குறித்த வர்த்தமானி வெளியீடு!

279 0

மேலும் மூன்று இராஜாங்க அமைச்சர்களின் விடயதானங்கள் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய ஜனக்க பண்டார தென்னகோன் மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகிய இராஜாங்க அமைச்சர்களின் விடயதானங்கள் தொடர்பில் அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலே வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட பின்னர் இராஜாங்க அமைச்சர்களுக்குரிய நிறுவனங்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அமைச்சரவை அமைச்சர்கள் அறிக்க நடவடிக்கை எடுக்க வேண்டு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியிருந்தார்.

அதற்கமைய ஓய்வூதியத் திணைக்களம், அரச மொழிகள் தினைக்களம், அரச மொழிகள் ஆணைக்குழு மொழி கல்வி மற்றும் பயற்சிகள் தொடர்பான தேசிய நிறுவனம், மனித வள அபிவிருத்தி தேசிய சபை, அரச சேவை ஓய்வூதியதாரர்கள் அறக்கட்டளை நிதி, ஆகிய விடயதானங்கள் அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதேபோல் இலங்கை நிர்வாக சபை, நில அளவை நிறுவனம், அரச முகாமைத்துவ மற்றும் நிதி நடவடிக்கைகள் ஆகிய விடயதானங்கள் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிய வண்ணவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

அத்துடன் இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிற்கான விடயதானங்களும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.