சிலாபம் பகுதியில் சட்டவிரோத சிகரட்டுகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிங்கபுரம் பகுதியில் நேறடறு வெள்ளிக்கிழமை இரவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக சிலாபம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சிலாபம் பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சப்பாத்து வர்த்தகரான குறித்த சந்தேக நபர் தனது காரில் மிகவும் சூட்சுமுமான முறையில் சிகரட்டுகளை மறைத்து கொண்டு சென்ற ; போதே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது வரி செலுத்தாமல் கொண்டுவரப்பட்ட 229 சிகரட்டு பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றிலிருந்து 45 ஆயிரத்து 800 சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் இன்று சனிக்கிழமை சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். இதன்போது நீதிவான் சந்தேக நபரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

