அதிசொகுசு பஸ்களை கொள்வனவு செய்ய திட்டம்

234 0

இலங்கை போக்குவரத்து சபைக்காக புதிதாக இரண்டாயிரம் அதி சொகுசு பஸ்களை கொள்வனவு செய்வதற்காக தற்போதைய நிலையில் கலந்துரையாடப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மீதொடமுல்ல டிப்போவிற்கு கண்காணிப்பு விஜயமொன்றை நேற்று (10) மேற்கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

புதிதாக 500 பஸ்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் இரண்டாயிரம் பஸ்களை கொள்வனவு செய்ய கலந்துரையாடப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.