மதுபான போத்தல்களுடன் நபரொருவர் கைது

261 0

அதிக விலைக்கு விற்பனை செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த அனுமதி பத்திரம் இல்லாத மதுபான போத்தல்கள் தொகையொன்றினை முச்சக்கரவண்டியில் கொண்டு சென்ற நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

60 போத்தல்களுடன் கெகிராவை நகரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெகிராவை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மதுபான தொகையின் பெறுமதி சுமார் ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கெகிராவை மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.