ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் புதிய விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆண்டு ஜனவரி 8 திகதி முதல் 2019 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு, இலஞ்ச ஆணைக்குழு மற்றும் பொலிஸ் விசேட பொலிஸ் பிரிவின் செயற்பாடுகளின் போது அரசியல் தலையீடு குறித்து ஆராய இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

