புதையல் அகழ்வில் ஈடுபட்ட 4 பேர் கைது

306 0

வெலிமட பிரதேசத்தில் சட்டவிரோதமாக புதையல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா விமான படை முகாமின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்கேதநபர்களிடம் இருந்து செப்பு தாயத்து, 13 சிப்பிகள் உட்பட அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் சில பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும் உபகரணங்களையும் மேலதிக விசாரணைகளுக்காக வெலிமட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.