ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கும் இந்தோனேசியா பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.
பரஸ்பர கல்வி சுற்றுலா மூலோபாய ஆய்வு மானியம் அல்லது புலமைப்பரிசில்களை வழங்குதல் கல்வி ஆசிரியர்களினதும் ஆய்வாளர்களினதும் பயிற்சிக்கான வசதிகளை வழங்கவும் இதன் மூலம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரகடனப்படுத்தப்பட்ட கலைப் பீட நூல் மற்றும் ஆவணங்களைப் பரிமாறும் மகாநாடு, செயலமர்வு மற்றும் இரு தரப்பினரும் ஆர்வத்தை வெளிப்படுத்தும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்தல் மற்றும் அவற்றில் பரந்துபட்ட ஒத்துழைப்பை ஊக்குவித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் புரிந்துணர்வுடன் செயற்படக்கூடிய வகையில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கும் இந்தோனேசியா பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கும் இடையில் கல்வி புரிந்துணர்வை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நூல் நிலையங்களுக்கான பரஸ்பர புரிந்துணர்வு, கல்வி பணியாளர் சபை, ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் வருகை தரும் விரிவுரையாளர்களின் சேவையை நிறுவனத்துக்கு இடையில் பரிமாறிக்கொள்ளல் என்பனவும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படுத்தப்படவுள்ளது.

