சிறுமி துஸ்பிரயோக வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

331 0

சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அக்குரெஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சாருவ லியனகே சுனிலுக்கு எதிராக சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 17 ஆம் திகதி வழங்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரத்ன இன்று (09) உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகேவால் அறிவிக்கப்படவிருந்தது.

எனினும், அவர் வேறொரு வழக்கு விசாரணையில் கலந்து கொண்ட காரணத்தால் இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரத்ன முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது.

இதன்போது, வழக்கின் தீர்ப்பினை எதிர்வரும் 17 ஆம் திகதி அறிவிப்பதாக நீதிபதி திலகரத்ன உத்தரவிட்டுள்ளார்.

14 வயதுடைய சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தி அகுரெஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு எதிராக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.