பரிசீலனைக்கு வருகின்றது ஹேமசிறி, பூஜித் ஜயசுந்தரவின் பிணை கோரிக்கை

220 0

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரின் பிணை கோரிக்கை மனு அடுத்தமாதம் 10 ஆம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த மனு தொடர்பான விசாரணை இன்று (வியாழக்கிழமை) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று நீதிமன்றில் சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், அவர்களுக்கு பிணை வழங்குவதற்கு எதிராக எழுத்து மூலமாக ஆட்சேபனை ஒன்றிணைத்து தாக்கல் செய்தார்.

இதனை அடுத்து அவரகள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிணை கோரிக்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதவான் அறிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.