தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் என்பதால் அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட சோபா மற்றும் எக்சா பாதுகாப்பு ஒப்பந்தங்களை உடனடியாக ரத்து செய்யும் யோசனையொன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்குமாறு ஜனாதிபதியிடம் மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறப்பினர் பிமல் ரத்நாயக்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார்.
பிமல் ரத்நாயக்க, ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலைய கருத்திற் கொண்டு, இலங்கையை யுத்தத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா மாற்றுவதற்கான தெளிவான சாத்தியம் இருப்பதால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக பிமல் கூறியுள்ளார்.

