இரத்மலானையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு!

269 0

இரத்மலானை – தர்மாராம பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்தள்ளார்.

குறித்த பிரதேசத்தில் வீடொன்றில் வசித்த வந்த மூவர் மீதே இவ்வாறு வீடு புகுந்து அடையாளம் தெரியாதோர்  கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.

அத்தோடு குறித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தள்ளதோடு , இருவர் படுகாயமடைந்து களுபோவில வைத்திசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்ற நிலையில் தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.