முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுக்கு நீதிவான் நீதிமன்றம் வழங்கிய பிணையை ஆட்சேபித்து சட்ட மா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றில் மீள் திருத்தல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவை தாக்கல் செய்ததாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளரும் ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளருமான ( சட்டம்) அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன கூறினார்.
வெள்ளை வேன் விவகாரம் குறித்த ஊடகவியலஆளர் சந்திப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்தினவை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணையில் செல்வதற்கு கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன கடந்த 2019 டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி அனுமதித்தமையும் குறிப்பிடத்தக்கது.

