நல்­லாட்சி அரசின் மோச­டி­க­ளுக்கு ரணிலே பொறுப்­புக்­கூற வேண்டும்!

213 0

நல்­லாட்­சி­யினால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள மோச­டிகள் தொடர்பில் தற்­போதே தக­வல்கள் வெளி­வர ஆரம்­பித்­துள்­ளன. முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்­கவின் வீட்­டி­லி­ருந்து மீட்­கப்­பட்ட இறு­வட்­டு­களில் பதி­வா­கி­யுள்ள விடயம் தொடர்பில் அவ­தானம் செலுத்­தினால் நாட்டில் சுதந்­தி­ர­மாக இயங்க வேண்­டிய சட்­டத்­து­றையில் எவ்­வ­ளவு மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ளன என்­பது உறு­தி­யா­கும்.

நல்­லாட்சி என்று கூறிக்­கொண்டு செயற்­பட்­ட­வர்கள் நாட்­டுக்கு எந்­த­வித நன்­மை­யுமே செய்­ய­வில்லை என்று உறு­தி­யா­கி­யுள்­ள­தாக ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பொதுச் செய­லாளர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார்

கடந்த அர­சாங்­கத்தில் இடம்­பெற்ற மோச­டிகள் தொடர்பில் முன்னாள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் பொறுப்புக் கூற­வேண்டும் என்றும்   அவர் குறிப்­பிட்டார்.

சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பிலே அதனை தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது, ஜனா­தி­பதி தேர்­தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்சி, ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­வுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தற்­காக தீர்­மா­னித்­தி­ருந்­தது.

இது சரி­யான தீர்­மானம் என்­பதே எமது நிலைப்­பாடு. தற்­போது அது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. எமது செயற்­குழு ஒன்­றி­ணைந்தே இந்த தீர்­மானத்தை எடுத்­தி­ருந்­தது. அதற்­க­மைய ஜனா­தி­பதி கோத்தபாய ராஜ­ப­க் ஷவின் வெற்­றிக்­காக நாங்­களும் பெரும் பங்­காற்றி­யி­ருந்தோம். எங்­க­ளது தீர்­மா­னத்தை எமது ஆத­ர­வா­ளர்­களும் ஏற்றுக் கொண்­டுள்­ளனர். சரி­யான தரு­ணத்தில் நாங்கள் சரி­யான தீர்­மா­னத்தை எடுத்­துள்ளோம் என்றே எமக்கு தோன்­று­கின்­றது.

கடந்த அர­சாங்­கமே மீண்டும் ஆட்சி அமைத்­தி­ருந்தால் நாடு பெரும் பாதிப்­பு­களை எதிர்­நோக்க வேண்­டி­யி­ருந்­தி­ருக்கும். கடந்த காலங்­களில் நாட்­டுக்கும் நாட்டு மக்­க­ளுக்கும் ஏற்­பட்­டி­ருந்த சவால்கள் தொடர்பில் நீங்கள் நன்கு அறி­வீர்கள். தற்­போது அந்த நிலை­மையில் மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது. நல்­லாட்சி என்று கூறிக்­கொண்டு செயற்­பட்­ட­வர்கள் நாட்­டுக்கு எத்­த­கைய நல்ல செயல்­க­ளையும் முன்­னெ­டுக்க வில்லை என்­பது தற்­போது நிரூ­ப­ணமா­கி­யுள்­ளது. இந்­நி­லையில் கடந்த அர­சாங்­கத்­தினால் ஆரம்­பிக்­கப்­பட்ட கம்­பெ­ர­லிய மற்றும் பெருந்­தெ­ருக்கள் வேலைத்­திட்­டங்­க­ளுக்­காக பெருந்­தொ­கை­யான  நிதி செல­வீ­டு­களை மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது.

அப்­போது சேவையில் ஈடுபட்ட ஊழி­யர்­க­ளுக்­கான சம்­பளக் கொடுப்­ப­ன­வுகள் கூட நல்­லாட்சி அர­சாங்­கத்தால் முறை­யாக வழங்­கப்­ப­ட­வில்லை. ஜனா­தி­பதி கோத்­தபாய சிறந்த தலைவர் என்­பதை அவ­ரது செயற்­பா­டு­களின் ஊடாக நாட்டு மக்­க­ளுக்கு உணர்த்­தி­வ­ரு­கின்றார். முன்­னைய அர­சாங்­கங்­களில் இடம்­பெற்ற பெரும் தொகை­யான செல­வு­களை அவர் தற்­போது கட்­டுப்­ப­டுத்­தி­யுள்ளார்.

அவர் முன்­மா­தி­ரி­யாக செயற்­ப­டு­கின்­ற­மை­யினால் அர­சாங்­கத்தின் ஏனை­ய­வர்­களும் அவரை பார்த்து செயற்­பட ஆரம்­பித்­துள்­ளனர். நல்­லாட்­சி­யினால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள மோச­டிகள் தொடர்பில் தற்­போதே தக­வல்கள் வெளி­வர ஆரம்­பித்­துள்­ளன. முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்­கவின் வீட்­டி­லி­ருந்து மீட்­கப்­பட்ட இறு­வட்­டு­களில் பதி­வா­கி­யுள்ள விடயம் தொடர்பில் அவ­தானம் செலுத்­தினால் நாட்டில் சுதந்­தி­ர­மாக இயங்க வேண்­டிய சட்­டத்­து­றை­யிலே எவ்­வ­ளவு மோச­டி­களை செய்­துள்­ளார்கள் என்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது.

இந்த செயற்­பாட்­டினால் சட்­டத்­துறை மீதான மக்­களின் நம்­பிக்கை பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான மோச­டி­களில் பங்­கு­கொண்­டுள்ள அர­சி­யல்­வா­திகள் , சட்­டத்­துறை அதி­கா­ரிகள் , பொலிஸார் , குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் உள்­ளிட்ட தரப்­பினர் மீது பரி­சீ­ல­னை­களை செய்து அதற்­க­மைய அவர்­க­ளுக்­கான தண்­ட­னை­களை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அர­சியல் பழி­வாங்கல் போக்கில் செயற்­ப­டு­வதை போல் வெறு­மனே கைது­களை செய்­யாது, விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து நீதி­மன்­றத்தின் உத்­த­ர­வுக்­க­மை­யவே தண்­ட­னைகள் பெற்றுக் கொடுக்­கப்­பட வேண்டும்.
பொது­ஜன பெர­மு­ன­வுடன்   இணைந்து செயற்­பட்­டாலும் ஜன­நா­யக ஆட்­சியை முன்­னெ­டுப்­ப­தற்­காக தொடர்ந்தும் செயற்­ப­டுவோம்.கடந்த அர­சாங்­கத்தில் இடம்­பெற்ற முறை­கே­டுகள் தொடர்பில் முன்னாள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் பதி­ல­ளிக்க வேண்டும்.  முன்னாள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் தெரிய பல முறை கேடுகள் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. இதுதொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

சுதந்திரமான சட்டத்துறை இயங்குவதாக தெரிவித்து வந்தவர்களின் ஆட்சிக்காலத்திலே சட்டத்துறைக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.இந்த விவகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி , பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சும் கவனம் செலுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதுடன் , பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.