நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் அமைக்கப்படவுள்ள பொது எதிர்க்கூட்டணியின் தலைமைப் பொறுப்பை சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வழங்க வேண்டுமென அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றிபெறுவதற்கு ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய ஆகிய மூவரும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவத்தை ரணில் விக்ரமசிங்கவுக்கும்,எதிர்க் கட்சித் தலைமையை சஜித் பிரேமதாசவுக்கும், கூட்டு எதிரணியின் தலைவராக கரு ஜயசூரியவும் செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
பொதுத்தேர்தலில் கரு ஜயசூரியவின் தேர்தல் பிரவேசத்தின் ஊடாகவே பௌத்த மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியுமென சிரேஸ்ட உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

