பதுளையில் காட்டுத் தீ – 10 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரை

277 0

பதுளை பெரகல – கீழ் விகாரகல பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக பத்து ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக அப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்புத்தளை பொலிஸாரும் அல்துமுள்ளை பிரதேச மக்களும் ஒன்றிணைந்து பாரிய சிரமத்துக்கு மத்தியில் காட்டுத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பாக அப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.