முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு இன்று மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 300,000 ரூபா அபரதமும் விதித்து கொழும்பு பிரதம நீதிவான் லங்கா ஜயரட்ண உத்தரவிட்டுள்ளார்.
பொது நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கு அமைவாகவே அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சரண குணவர்தன தேசிய லொத்தர் சபையின் தலைவராகவும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

