மஸ்கெலியா நகர்ப் பகுதியில் பொது சுகாதார ஆய்வாளர்கள் குழு நேற்றுமுன்தினம் 96 உணவு நிலையங்களில் திடீர் சோதனைகளை நடத்தியது.
இதன்போது பாவனைக்கு உதவாத வகையில் உணவுப் பொருட்களை வைத்திருந்த வர்த்தகர்கள் மீது வழக்கு தொடரவுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட பொது சுகாதார ஆய்வாளர் காமினி பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும் உணவு பண்டங்களை பாதுகாப்பாக வைத்திராத 16 உணவகங்கள், 02 பேக்கரிகள், 8 மளிகைக் கடைகள் மற்றும் 5 கோழிப்பண்ணைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார ஆய்வாளர்களால் இனங்காணப்பட்ட முறையற்ற முறையில் இயங்கும் உணவகங்களிலுள்ள குறைகளை 14 நாட்களுக்குள் திருத்தங்களை செய்யுமாறும் எச்சரித்துள்ளனர். அத்துடன் மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரியிடம் அறிவிக்க வேண்டும் எனவும் நுவரெலியா மாவட்ட பொது சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.
இச்சுற்றிவளைப்பானது மஸ்கெலியா, ரக்காடு, நல்லத்தண்ணி மற்றும் சாமிமலை ஆகிய பகுதிகளில் இடம்பெற்றதுடன் இதில் நுவரெலியா மாவட்டத்தின் 30க்கும் மேற்பட்ட பொது சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

