மிரிஹான – கிம்புலாவல கால்வாய்க்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
மிரிஹான அவசர அழைப்பு பிரிவுக்கு இன்று கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெஹிவளை பகுதியைச் சேர்ந்த மொஹமட் சுஹேர் மொஹிதீன் என்ற நபரே அவ்வாறு உயிரிழந்திருப்பதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
சடலம் மீட்கப்பட்ட போது அதன் நிலையை அவதானித்த பொலிஸார் மரணம் தொடர்பில் சந்தேக எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழப்புக்கு காரணம் கொலையா? தற்கொலையா ?என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை சடலம் தொடர்பான நீதிவான் பரிசோதனைகளை நுகேகொட நீதிவான் முன்னெடுத்ததை அடுத்து பிரதே பரிசோதனைக்காக சடலம் கலுபோவிலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

