ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று

320 0

ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் ஒன்று இன்று (02) முற்பகல் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இன்று முற்பகல் 11.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்போது, ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் மற்றும் சபைத் தலைவர் தெரிவு செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அத தெரணவிற்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அரசின் வேலைத்திட்டங்கள் மற்றும் நாளை (03) ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற அமர்வு மற்றும் பாராளுமன்றின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் ஒன்று இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்தார்.

எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நாளை (03) முற்பகல் 10.00 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டவுள்ளது.

இதன்போது, ஜனாதிபதிக்காக 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ முதலாவது பாராளுமன்ற கூட்டத் தொடரை தலைமையேற்கவுள்ள நிலையில், புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை ஜனாதிபதியால் மேற்கொள்ளப்படவுள்ளது.

பின்னர் பாராளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு மதியம் 1.00 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.