வடக்கு, கிழக்கு வரலாற்று இடங்களில் ஆய்வு நடத்தவுள்ள புத்தசாசன அமைச்சு

294 0

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் உள்ள வர­லாற்று இடங்கள் குறித்து சிறப்பு ஆய்வொன்றை நடத்­த­வுள்­ள­தாக,  புத்த சாசன மற்றும் கலா­சார விவ­கா­ரங்கள் அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

புத்த சாசன மற்றும் கலா­சார  விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்­சரின் உத்­த­ர­வுக்கமைய தொல்­பொருள் திணைக்­க­ளத்­துடன் இணைந்து கூட்­டாக இந்த ஆய்வை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக அமைச்சின் செயலாளர் எம்.கே.பி ஹரிஸ்­சந்­திர தெரி­வித்­துள்ளார்.

மேலும், வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் உள்ள அனைத்து ஆல­யங்­களின் அமை­விடம், வர­லாறு, மற்றும் தற்­போ­தைய நிலை என்­பன இந்த ஆய்வின் ஊடாக ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.

இவ்­வா­றான இடங்­களில் ஏதா­வது அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத குடி­யேற்­றங்கள் இடம்பெற்­றி­ருந்தால் அவற்றை அகற்­று­வதற்கு அல்­லது வேறு இடத்­துக்கு மாற்­று­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.