யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடாத்தபட்ட ‘யாழ் ஊடக விருது 2019′ வழங்கும் நிகழ்வில் ஏழு பிரிவுகளின் கீழ் ஏழு ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை யாழ்ப்பாணத்தில் சிறப்புடன் நடைபெற்றுள்ளது.’அமரர் மயில்வாகனம் நிமலராஜன்’ ஞாபகார்த்த விருது – மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகர்.அமரர் மயில்வாகனம் நிமலராஜன் ஞாபகர்த்தமாக, நெருக்கடியான சூழலில் அறிக்கையிடல் பணிக்கான விருது மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகர் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
‘அமரர் தராகி சிவராம்’ ஞாபகார்த்த விருது – மூத்த ஊடகவியலாளர் நடேசப்பிள்ளை வித்தியாதரன்.அமரர் தராகி சிவராம்’ ஞாபகார்த்தமாக, அர்ப்பணிப்புமிக்க ஊடக சேவைக்கான விருது(வடக்கு) மூத்த ஊடகவியலாளரும் காலைக்கதிர் ஆசிரியருமான நடேசப்பிள்ளை வித்தியாதரன் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.. ‘அமரர் ஐயாத்துரை நடேசன்’ ஞாபகார்த்த விருது – மூத்த ஊடகவியலாளர் விஸ்வராஜா காந்தகுமார்.அமரர் ஜயாத்துரை நடேசன் ஞாபகார்த்தமாக, அர்ப்பணிப்புமிக்க ஊடக சேவைக்கான விருது(கிழக்கு) மூத்த ஊடகவியலாளர் விஸ்வராஜா காந்தகுமார் (மட்டக்களப்பு) அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இவ்விருதுகளை வடமாகாண மேல்நீதிமன்ற நீதியரசர் அன்னலிங்கம் பிறேமசங்கர் அவர்கள் வழங்கி கௌரவித்திருந்தார்.’அமரர் செல்வராசா ரஜிவர்மன்’ ஞாபகார்த்த விருது – ஊடகவியலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன்.அமரர் செல்வராசா ரஜிவர்மன் ஞாபகார்த்தமாக, போர்க்கால ஊடகப்பணி மற்றும் தொடரும் ஊடக சேவைக்கான விருது ஊடகவியலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் (கிளிநொச்சி) அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
‘அமரர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி’ ஞாபகார்த்த விருது – ஊடகவியலாளர் செல்வி. சதாசிவம் சகீலா.அமரர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி ஞாபகார்த்தமாக, நெருக்கடிகளிற்கு மத்தியிலான பெண் ஊடகவியலாளராக ஊடகப்பணிக்கான விருது ஊடகவியலாளர் செல்வி.சதாசிவம் சகீலா (முல்லைதீவு) அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.’அமரர் சகாதேவன் நிலக்சன்’ ஞாபகார்த்த விருது – ஊடகவியலாளர் தர்மபாலா திலக்சன்.அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக, வருடத்தின் சிறந்த செய்தி புகைப்படத்துக்கான விருது நெருக்கடிகள் மத்தியிலான பணியாற்றிய தர்மபாலா திலக்சன் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
‘அமரர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன்’ ஞாபகார்த்த விருது – முஸ்லீம் ஊடகவியலாளரான லாபீர்.அமரர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் ஞாபகார்த்தமாக, வருடத்தின் சிறந்த பிரதேச செய்தியாளர் விருது சக முஸ்லீம் ஊடகவியலாளரான லாபீர் அவர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










