தேசிய மரம் நடும் வாரம் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேசிய மரம் நடுகை வாரத்தின் ஆரம்ப நிகழ்வு நாளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் அனுராதபுரத்தில் உள்ள மகாமேகவனம் உயனவில் நடைபெறவுள்ளது
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் இலங்கையின் வன அடர்த்தியை 30% சதவீதம் அதிகரிக்கும் நோக்கில் தேசிய மரம் நடும் திட்டம் அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

