காணாமல்போன ஊடவியலாளர் பிரஹித் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட, தனது கணவர் காணாமல் போன விடயம் தொடர்பான சாட்சிகள் இராணுவ புலனாய்வுத் துறையினரால் அச்சுறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அதனால் குறித்த விசாரணை நடவடிக்கையானது பாதிப்படைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று ஊடகங்கள் முன்னிலையில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு இதனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கும் எனது கணவர் காணாமல் ஆக்கப்பட்டமைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

