முன்னாள் பிரதியைமச்சர் சந்திரசிறி சூரியாராச்சியை எதிர்வரும் ஜனவரி 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பொலன்னறுவை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பத்துள்ளது.
ஒரு தொழில் அதிபரை கைத் துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தியமை மற்றும் நான்கு வாகனங்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டிற்கமையவே அவர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதியமைச்சர் சந்திரசிறி சூரியாராச்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மின்னேறிய அமைப்பாளர் பதவியில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

