தேர்­தலில் கட்­டுப்­ப­ணத்தை அதி­க­ரிக்­கா­விடின் பாரிய நெருக்­கடி ஏற்­படும்!

246 0

எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் அர­சியல் கட்­சிகள் மற்றும் சுயேச்சை வேட்­பா­ளர்கள் அதி­க­ளவில் கள­மி­றங்­குவர். எனவே, வேட்­பு­மனு தாக்கல் செய்யும் வேட்­பா­ளர்­க­ளுக்­கான கட்­டுப்­ப­ணத்தை அதி­க­ரிக்­காத பட்­சத்தில் ஜனா­தி­பதித் தேர்­தலை போன்று பாரிய சிக்­க­லுக்கு முகம் கொடுக்க நேரிடும் என தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய எச்­ச­ரித்­துள்ளார்.

தற்­போது பதிவு செய்­யப்­பட்ட அர­சியல் கட்­சிகள் 70 உள்­ளன. இவற்றில் இருந்து ஒவ்­வொரு தொகு­திக்கு ஒரு வேட்­பாளர் கல­மி­றக்கும் பட்­சத்தில் வேட்­பாளர் தொகை அதி­க­ரிக்கும் அதே போன்று சுயேட்சை வேட்­பா­ளர்­களும் கல­மி­றங்கும் பட்­சத்தில் இத்­தொகை மேலும் அதி­க­ரிக்கும்.

நடந்து முடிந்த ஜனா­தி­பதி தேர்­தலில் 35 வேட்­பா­ளர்கள் கள­மி­ரங்­கி­ய­மை­யினால் மேல­தி­க­மாக பாரிய தொகையை செல­விட நேர்ந்­தது. இவ்­வாறு பொதுத்­தேர்­த­லிலும் அதிக வேட்­பா­ளர்கள் கள­மி­றங்­கு­வார்­க­ளாயின் தேர்தல் செலவு பல மடங்கு அதி­க­ரிக்கும்.

1981 ஆம் ஆண்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட கட்­டுப்­பணத் தொகையே தற்­போதும் அற­வி­டப்­ப­டு­கின்­றது. அக்­கா­லப்­ப­கு­தியில் பதிவு செய்­யப்­பட்ட 10 கட்­சி­களே இருந்­தன. ஆனால் தற்­போது நிலைமை வேறு. அக்­கா­லத்­துடன் ஒப்­பி­டு­கையில் கட்­டுப்­ப­ணத்­தொகை 50 மடங்கால் அதி­க­ரிக்­கப்­பட வேண்டும். அதன்­படி பதிவு செய்­யப்­பட்ட அர­சியல் கட்­சியில் போட்­டி­யிடும் வேட்­பா­ள­ருக்கு முப்­ப­தா­யிரம் ரூபாவும் சுயேட்சை வேட்­பா­ள­ரி­ட­மி­ருந்து ஐம்­ப­தா­யிரம் ரூபாவும் அற­வி­டப்­ப­ட­வேண்டும்.

கட்டுப்பணத்தொகையை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கான திருத்த சட்ட மூலத்திற்கு பாராளுமன்றத்தின் அனுமதியை எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.