குற்றத்தடுப்பு பிரிவுக்கு சென்றார் சம்பிக்க!

257 0

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க இன்று காலை கொழும்பில் உள்ள குற்றத் தடுப்பு பிரிவுக்கு சென்றுள்ளார்.

2016 ஆம் ஆண்டு சந்தீப் என்ற இளைஞன் விபத்­துக்­குள்­ளான விவகாரத்தில் தனது அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி சார­தியை மாற்றி, உண்­மையை மறைத்து சாட்­சி­யங்­களை சோடித்து  நீதித்துறைக்கு மோசடி செய்­தமை தொடர்­பி­லான குற்­றச்சாட்டில்  கைதாகி  விளக்கம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த முன்னாள் அமைச்சர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்கவை கடந்த 25 ஆம் திகதிக பிணையில் செல்ல இன்று கொழும்பு நீதிவான் நீதி­மன்றம் அனுமதித்தது.

25 ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யான ரொக்கப் பிணை­யிலும் , 5 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீர பிணை­க­ளிலும் செல்ல  கொழும்பு மேல­திக மேல­திக நீதிவான் காஞ்­சனா நெரஞ்­சனா டி  சில்வா  இந்த உத்­த­ரவை பிறப்­பித்தார்.

அத்துடன் வழக்கின் சாட்­சி­யா­ளர்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுக்கக் கூடாது என்று அவரை எச்­ச­ரித்­த­துடன்  மாதந்­தோறும் இறு­தி­யாக வரும் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில்   முன்­னி­லை­யாகி கையெ­ழுத்­திட வேண்டும் எனவும் நிபந்­தனை விதித்தார்.

அதன் அடிப்படையிலேயே அவர் இன்றைய தினம் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.