ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்: 10 ராணுவ வீரர்கள் பலி!

252 0

ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

இதுகுறித்து ஆப்கான் அதிகாரிகள் தரப்பில்,”ஆப்கானிஸ்தானில் தென்பகுதியில் உள்ள ஹெல்மண்ட் மாகாணத்தில் அமைந்துள்ள ராணுவ தளம் ஒன்றில் இன்று (சனிக்கிழமை ) நடத்திய தீவிரவாத தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர்” என்று தெரிவித்துள்ளனர்.

தலிபான்கள் நடத்திய சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஹெல்மண்ட் மாகாண செய்தித் தொடர்பாளர் ஒமர் சவாக் தெரிவித்துள்ளார்.

தலிபான்கள் மற்றும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த சில வாரங்களாகவே ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

 

இந்தத் தேடுதல் வேட்டையில் தலிபான்கள் பலர் கொல்லப்பட்டனர். மேலும், தலிபான்களிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் பல மாகாணங்களில் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை ஆப்கன் பாதுகாப்புப் படையினர் நடத்தி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில் தேசிய அளவிலும், பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.