வெல்லவத்த பகுதியில் தீர்வை செலுத்தாது இந்நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து 1860 சிகரட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

