கேகாலை, பின்தெனிய பகுதியில் ஒரு தொகை கேரள கஞ்சாவுடனும் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றுடனும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் ஒருங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து 2 கிலோவிற்கு அதிகமான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் விளக்கமறியலில் இருக்கும் பிரதான போதைப்பொருள் வர்த்தகரான கரன்தெனிய சுத்தாவின் உதவியாளர் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

