கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியாகியுள்ள நிலையில் இம்முறை பரீட்சைகளுக்கு 2 இலட்சத்து 81 ஆயிரத்து 786 பேர் தோற்றியிருந்த நிலையில் இவர்களில் ஒரு இலட்சத்து 81 ஆயிரத்து 126 பேர் பல்கலைக்கழக பிரவேசத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். அதேபோல் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 71 ஆகும்.
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியானது. அதற்கமைய கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 2 இலட்சத்து 81 ஆயிரத்து 786 பேர் தோற்றியிருந்தனர். இதில் புதிய பாடத்திட்டத்திற்கு அமைய மூன்று பாடங்களிலும் தோற்றிய விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 87 ஆயிரத்து 167 ஆகும். பழைய பாடத்திட்டத்திற்கு அமைய மூன்று பாடங்களுக்கும் தோற்றுவித்த மாணவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்து 619 பேராகும். இவர்களின் புதிய பாடத்திட்டத்திற்கு அமைய 113,637 மாணவர்களும், பழைய பாடத்திட்டத்துக்கு அமைய 67 ஆயிரத்து 489 மாணவர்களுமாக மொத்தமாக ஒரு இலட்சத்து 81 ஆயிரத்து 126 பேர் பல்கலைக்கழக பிரவேசத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். அத்துடன் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பரீட்சாத்திகளின் எண்ணிக்கை 71 ஆகும்.
மேலும் பெறுபேறுகள் மீளாய்வு தொடர்பான விண்ணப்பிக்ககூடிய இறுதி திகதி ஜனவரி மாதம் 7 ஆம் திகதியாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் பாடசாலை பரீட்சாத்திகளுக்கான மீளாய்வு தொடர்பான விண்ணப்ப படிவங்கள் பெறுபேற்று ஆவணங்களுடன் பாடசாலை அதிபருக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன் தனிப்பட்ட பரீட்சாத்திகள் பரீட்சை திணைக்களத்தினால் தேசிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் அறிவித்தல்களுக்கு ஏற்ப விண்ணப்பப்படிவங்களை பூரணப்படுத்தி அனுப்ப வேண்டும். மேலும் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திலும் பார்வையிட முடியும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

