உலகளவில் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனைகளில் வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளதாக அதிபர் புதின் பெருமையாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யா ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனைகளை வெற்றிக்கரமாக நடத்தியதாக சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களில் செய்தி வெளியாகியது. இந்த நிலையில் இந்த வெற்றியை ரஷ்ய அதிபர் புதின் தனது அதிகாரிகளுடன் பெருமையுடன் பகிர்திருக்கிறார்.
உலகளவில் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்திய முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளது. நம்மை யாராலும் நெருங்க முடியாது. ரஷ்யா புதிய வகை ஆயுதங்களை உருவாக்குவதில் உலகை வழி நடத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதமே ஹைப்பர்சோனிக் ஏவுகணை குறித்து புதின் முதன் முறையாக பேசி இருந்தார். ஹைபர்சோனிக் ஏவுகணைகள் ஒலியைவிட 5 மடங்கு வேகமாக பயணிக்கும் என்றும் புதின் தெரிவித்துள்ளார்.
ஏவுகணை சோதனையில் ரஷ்யாவின் போட்டி நாடுகளாக கருதப்படும் அமெரிக்காவும், சீனாவும் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

