இந்த வருடத்தில் இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த காலப்பகுதிக்குள் நாடளாவிய எஸ்.ரீ.எப். எனப்படும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் முன்னெடுத்துள்ள 84 சுற்றிவளைபுக்களில் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய 120 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீபின் நேரடி கட்டளையின் கீழ் பிரதிக் கட்டளைத் தளபதி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் லயனல் குணதிலகவின் மேற்பார்வையில் இடம்பெற்ற சுற்றிவளைப்புக்களிலேயே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

