புத்தளத்தில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

253 0

புத்தளம் முள்ளிபுரம் களப்பு பகுதியில் கேரள கஞ்சா 80.25 கிலோ கிராமுடன் சந்தேகத்தின் பெயரில் மூவர் கடந்த 23 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 32, 38 மற்றும் 47 வயதுடைய புத்தளம் முள்ளிபுரத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

குறித்த களப்பு பகுதியில் கடற்படையினரால் நடத்தப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 80.250 கிலோ கிராம் கேரளக் கஞ்சாவுடன் அவர்களுக்கு சொந்தமான படகு மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பனவும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சா மற்றும் படகு, மோட்டார் சைக்கிள்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.