மோட்டார் வாகன பதிவு திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சாரதி அனுமதி பத்திரம் வௌியீட்டிற்கான ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக சுயாதீன ஆணைக்குழு ஒன்றை நியமிக்கவுள்ளதாக போக்குவரத்து சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மோட்டார் வாகன பதிவு திணைக்கள அதிகாரிளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ஒப்பந்தம் செய்துக் கொண்ட நிறுவனத்தினால் நிதி மோசடியொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், ஒப்பந்த காலப்பகுதியினுள் குறித்த நிறுவனம் ஒப்பந்தத்திற்கு அமைய செயற்படாமையினால் அரசாங்கத்திற்கு பாரிய நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, குறித்த நிறுவனம் தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்காக சுயாதீன ஆணைக்குழு ஒன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின் பின்னர் குறித்த நிறுவனம் இலங்கையினுள் செயற்படுவதை இடைநிறுத்த தேவையான ஆவணங்களை பட்டியலிடுவதற்கும் மற்றும் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

