எல்ல, வெல்லவாய வீதியின் 10 ஆம் கட்டை பகுதியில் இன்று (24) காலை முச்சக்கரவண்டி ஒன்று கவிழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எல்ல கும்புக்வெல்ல பகுதியை சேர்ந்த 49 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

