ஒரு கிலோகிராம் சம்பா மற்றும் நாட்டரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையாக 99 மற்றும் 98 ரூபாய் நிர்ணிக்கப்பட்ட போதும், அதனைவிட குறைந்த விலையில் அந்த அரிசி வகைகளை மக்களுக்கு விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை விவசாய சம்மேளனம் தெரிவித்துள்ளது.
2018 சிறுபோக மற்றும் 2019 பெரும்போக என்பனவற்றில் பெற்றுக்கொள்ளப்பட்ட நெல்லே சந்தைக்கு விநியோகிக்கப் படுவதாக அந்த சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
புதிய விலை சூத்திரத்திற்கு அமைய, ஒரு கிலோ நாட்டரிசியை 88 ரூபா 20 சதத்திற்கும், ஒரு கிலோ சம்பா அரிசியை 84 ரூபாவுக்கும், ஒரு கிலோ கீரி சம்பாவை 136 ரூபாவுக்கும் விற்பனை செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

