ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்துக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்துங்கள்-அத்துரலியே

262 0

ஹிஸ்புல்லவின் மட்டகளப்பு தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரர் இது தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவின் மட்டகளப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் இதுவரையில் இடம்பெற்றுள்ள விசாரணைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து , விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கும் நேக்கில் இன்று நிதி குற்றப் புலனாய்வு பிரிவிக்கு வந்திருந்த போது இதனை தெரிவித்த தேரர் மேலும் கூறியதாவது,

இலவசமாக தொழிநுட்ப கல்வியை வழங்கும் நோக்கில் நிலத்தை பெற்றுக் கொண்ட முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லா , அதனை தற்போது ‘பெர்ட்டிகிலோ கெம்பஸ்’ மட்டகளப்பு தனியார் பல்கலைக்கழகமாக உருவாக்கியுள்ளார்.

இந்த பல்கலைக்கழகத்தை உருவாக்குவதன் ஊடக பல சட்ட மீறல்கள் இடம்பெற்றுள்ளன. இலவச தொழிநுட்ப கல்வியை வழங்குவதாக கூறப்பட்டு இந்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டாலும் தற்போது கலைபீடமாக அதனை மாற்றி  இஸ்லாமிய அடிப்படைவாத கல்வியை போதிக்கும் நிலையமாக உருவாக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தை அமைப்பதற்காக சவுதிஆரேபியாவிலிருந்து பெருந்தொகையான நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதிகளை எந்த முறையில் பயன்படுத்தினார்கள் என்பது தொடர்பிலும்  இதுவரையில் விளக்கமில்லாமல் இருப்பதுடன் , இவ்வாறு நிதியை வழங்கிய நிறுவனங்களின் நோக்கம் தொடர்பிலும் ஆராய்ந்து பார்க்கவேண்டும். இந்நிலையில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை போதிக்கும் எண்ணத்திலேயே சவுதி அரேபியாவிலிருந்து இந்த நிதி வழங்கப்பட்டிருக்கும் என்றே நாங்கள் கருதுகின்றோம்.

இவ்வாறான நிலையில் இந்த விசாரணைகளின் தற்போதைய நிலைகுறித்து ஆராய்வதற்காக நிதி குற்றப் புலனாய்வு பிரிவிக்கு வந்தபோது , இங்கு விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் தற்போது குற்றப் புலனாய்வு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் நாங்கள் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு சென்று விசாரணை அதிகாரிகளை சந்தித்து , இந்த விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கேட்டுக் கொண்டோம்.