இலத்திரனியல் கழிவுகளால் எதிர்காலத்தில் இலங்கைக்கு அச்சுறுத்தல்

327 0

இலத்திரனியல் கழிவுகளினால் இலங்கை பாரிய சூழல் அச்சுறுத்தலை எதிர்க்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. கழிவு முகாமைத்துவம் குறித்து அறிந்திருந்த போதிலும் அந்த கலாசாரத்திற்கு நாம் இன்னும் பழக்க்படபவில்லை என மேல் மாகாண ஆளுநர் வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல தெரிவித்தார். 

மேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மக்களால் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முறைப்பாடுகளை எமது செயலணியிடம் தெரிவிக்க முடியும். சுகாதார பாதுகாப்பற்ற சூழல் மக்களுக்கு பேரழிவையே ஏற்படுத்தும். இலத்திரணியல் கழிவுகள் இன்னும் சில வருடங்களில் இலங்கை எதிர்க்கொள்ளும் பாரிய சூழல் அழிவாக அமையப்போகின்றது.

மின்கலம் உள்ளிட்ட நவீன உலகில் பயன்படுத்தப்பட்டதன் பின்னர் ஒதுக்கப்படும் இலத்திரனியல் கழிவுகள் உலகில் பாரிய சுகாதார சவால்களை ஏற்படுத்தியுள்ளன.

இலங்கையும் அந்த அச்சப்பாட்டிற்குள் உள்ளது. கழிவு முகாமைத்தும் குறித்து அறிந்துள்ள நாம் அதனை கலாசார ரீதியில் உள்வாங்க தவறி விட்டோம். எனவே சிறந்த கழிவு முகாமைத்துவ கலாசாரம் நாட்டு மக்களுக்கு தேவைப்படுகின்றது.

அதனை மையப்படுத்திய திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும் என்றும் கூறினார்.