ரயில் பயணிகளுக்கு முற்கொடுப்பனவு அட்டை- சி.பி.ரத்நாயக்க

283 0
ரயில் பயணிகளுக்காக முற்கொடுப்பனவு அட்டை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ரயில் சேவை இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த செயற்பாடுகளுக்கான தேவையான நடவடிக்கைகள் தற்போதைய நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, உடனடியாக அமைச்சரவைக்கு குறித்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டு அனுமதியை பெற்றுக் கொள்ள எதிர்ப்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.