விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரான கொத அசங்க என்ற நபரின் உதவியாளர் ஒருவர் 11 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் தொம்பே, மல்வான பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் ரணால, நவகமுவ மற்றும் கடுவலை பிரதேசங்களின் குற்றக் குழு உறுப்பினர் என தெரியவந்துள்ளது.
அவரிடம் இருந்து 11 கிலோ 753 கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக தொம்பே பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடப்படை தெரிவித்துள்ளது.

