முரண்பட்ட தகவல்களை வழங்கினார் சுவிஸ் தூதரக பணியாளர் – ரமேஷ் பத்திரன

368 0

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிஸ் தூதரக பணியாளர் முரண்பட்ட தகவல்களை வழங்கியுள்ளார் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சுவிஸ் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “விசாரணைகள் வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. குற்றம் சாட்டப்பட்டவர் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டுள்ளார். இது அரசாங்கத்தை இழிவுபடுத்துவதற்காக செயற்பாடு என கருதுகின்றோம்” என கூறினார்.

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ்ஸிடம் 3 நாட்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரை இன்றைய தினமும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.