இந்திய நாடாளுமன்றம் பிரஜாவுரிமை திருத்த சட்ட மூலத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ள அதேவேளை பிரஜாவுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் அசாம் மாநிலத்தில் பாரிய போராட்டங்கள் வெடித்துள்ளன.
பிரஜாவுரிமை திருத்த சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானவர்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளதுடன் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய பிரஜாவுரிமை சட்டம் காரணமாக பங்களாதேசை சேர்ந்த சட்டவிரோத இந்து மற்றும் பெங்காலி குடியேற்றவாசிகள் தங்கள் கலாச்சார மொழி அடையாளங்களை அழித்துவிடுவார்கள் என அச்சம் வெளியிட்டுள்ள அசாம் மக்கள் குறிப்பிட்ட சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
பங்களாதேசை சேர்ந்த இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றிணைந்தால் தங்கள் எண்ணிக்கை குறைவடைந்துவிடும் எனவும் அசாம்மொழி பேசும் மக்கள்அச்சம் வெளியிட்டுள்ளனர்.

திரிபுராவில் இதுஇடம்பெற்றுள்ளமை அசாமில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது,அந்த மாநிலத்தில் பங்களாதேசைசேர்ந்த இந்து குடியேற்றவாசிகள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
புதிய சட்ட திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகளை தொடர்ந்து அசாமின் குவஹாட்டி நகரில் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்த அதிகாரிகள் இணைய கையடக்கதொலைபேசி வசதிகளை துண்டித்தனர்.
இதன் பின்னர் அசாமின் திப்புருகாவில் உள்ள முதலமைச்சர் மத்தியஅமைச்சர்களின் வீடுகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் இலக்குவைத்ததை தொடர்ந்துஅதிகாரிகள் அந்த பகுதியிலும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தனர்.
முதலமைச்சரின் வீட்டின் மீது கல்வீச்சு இடம்பெற்றதாகவும்,மத்திய அமைச்சரின் வீட்டின் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதலைமைச்சரின் பகுதியிலுள்ள புகையிரதநிலையமொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அசாமின் முக்கிய நகரங்களில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலையும் ஊரடங்கு உத்தரவினை மீறி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை திரிபுராவிலும் பதட்டமான சூழ்நிலை காணப்படுவதுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அசாம் மக்களின் உரிமைகளை பாதுகாப்பது குறித்து மத்திய அரசாங்கம் உறுதியாகவுள்ளது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
உங்கள் உரிமைகளை எவரும் பறிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2015 ற்கு முன்னர் இந்தியாவின் அயல்நாடுகளில்இருந்து இந்தியாவில் அடைக்கலம் கோரிய முஸ்லீம்கள் அல்லாதவர்களிற்கு இந்திய பிரஜாவுரிமையை வழங்கும் சட்ட மூலம் நேற்று இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.

